பரந்த பெருநிறுவன கடனாளிகளுக்கு தனிப்பட்ட குறியீடு-ரிசர்வ் வங்கி கட்டாயம்
November 4 , 2017 2722 days 1066 0
இந்திய ரிசர்வ் வங்கி 5 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெறும் அனைத்து பெருநிறுவன கடனாளிகளும் கட்டாயமாக 20 இலக்க சட்டப்பூர்வமான நிறுவன அடையாளத்தைப் (LEI-Legal Entity Identifiers) பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வங்கித் துறையில் வாராக் கடன்கள் மிகுதியாக அதிகரித்து வரும் வேளையில், இந்த நடவடிக்கை கடன் மேலாண்மையை சீர்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும்.
உலகம் முழுவதும் உள்ள நிதிப் பரிவர்த்தனைகளில் சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 20 இலக்க தனிப்பட்ட குறியீடே இந்த அடையாள அமைப்பு ஆகும்.
இந்திய தீர்வுகாண் நிறுவனத்திற்கு (Clearing Corporation Of India) முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமான இந்திய சட்டப்பூர்வ நிறுவன அடையாள அமைப்பு நிறுவனம் (Legal Entity Identifier India Limited) இந்தியாவில் இயங்கிவரும், உலகளாவிய, சட்டத்திற்கு இணக்கமாக செயல்பட்டுவரும் சட்டப்பூர்வ நிறுவன அடையாளங்காட்டிகளை வழங்குவதற்கான உள்ளூர் செயல் நிறுவனம் (Local Operating Unit) போல் பணியாற்றுகிறது.
சட்டப் பூர்வமான நிறுவன அடையாளங்காட்டி அமைப்பு (LEI-Legal Entity Identifiers) ஜி20 என்ற அமைப்பில் ஏற்படுத்தப்பட்டது.
இதன் மூலம் பல்வேறு தேசிய எல்லைகளில் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்கள் முழுமையாக கண்காணிக்கப்படும்.
இது நிதியியல் நிறுவனங்கள் தனித்துவம் கொண்ட இத்தகு நிறுவனங்களை அடையாளம் காண்பதில் தவறியதால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல் சட்டப் பூர்வ நிறுவன அடையாளங் காட்டி 2012 டிசம்பர் மாதத்தில் அளிக்கப்பட்டது.