TNPSC Thervupettagam

பரம்பிக்குளம் ஆழியார் திட்ட ஒப்பந்தம்

September 8 , 2024 29 days 84 0
  • இந்தத் திட்டம் ஆனது தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலும் உள்ள வறட்சியால் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள பகுதிகளின் நிலையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கு நோக்கி பாயும் எட்டு ஆறுகள்: ஆனைமலை மலையில் பாயும் ஆறு நதிகள் (ஆனைமலையாறு, சோலையாறு, தூணக்கடவு, நீரார், பெருவாரிபள்ளம், மற்றும் பரம்பிக்குளம்) மற்றும் சமவெளியில் பாயும் இரண்டு நதிகள் (ஆழியார் மற்றும் பாலாறு) ஆகியவற்றின் நீர்வழித் தடத்தினை மாற்றி ஒருங்கிணைக்கப் படுகிறது.
  • 1970 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதியன்று, இரு மாநிலங்களும் 1958 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அதற்கு பின்னோக்கியத் தேதிகளிலும் செல்லுபடியாகும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • பரம்பிக்குளம் தவிர, மற்ற எட்டு அணைகளும் இந்த வலையமைப்பின் ஒரு பகுதி ஆகும் என்பதோடு இவற்றின் மொத்த கொள்ளளவு சுமார் 31.5 ஆயிரம் மில்லியன் கன அடி (TMC) ஆகும்.
  • நீர் மின் நிலையங்களின் மொத்த ஆற்றல் உற்பத்தித் திறன் 210 மெகாவாட் ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டில், மாநிலங்களுக்கு இடையேயான நீர் ஒப்பந்தங்கள் குறித்த முதல் அமைச்சர்கள் மாநாட்டில் இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க ஒப்புக் கொள்ளப் பட்டது.
  • நீராறு-நள்ளாறு பல்நோக்குத் திட்டத்துடன் ஆனைமலையாற்றில் இருந்து 2.5 TMC தண்ணீரைத் தமிழகத்திற்கு திருப்பி விடுவதற்கு கேரள அரசு ஒப்புக் கொண்டால், மேற்கு மாவட்டங்களில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையைக் குறைக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்