இந்தத் திட்டம் ஆனது தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலும் உள்ள வறட்சியால் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள பகுதிகளின் நிலையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கு நோக்கி பாயும் எட்டு ஆறுகள்: ஆனைமலை மலையில் பாயும் ஆறு நதிகள் (ஆனைமலையாறு, சோலையாறு, தூணக்கடவு, நீரார், பெருவாரிபள்ளம், மற்றும் பரம்பிக்குளம்) மற்றும் சமவெளியில் பாயும் இரண்டு நதிகள் (ஆழியார் மற்றும் பாலாறு) ஆகியவற்றின் நீர்வழித் தடத்தினை மாற்றி ஒருங்கிணைக்கப் படுகிறது.
1970 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதியன்று, இரு மாநிலங்களும் 1958 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அதற்கு பின்னோக்கியத் தேதிகளிலும் செல்லுபடியாகும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
பரம்பிக்குளம் தவிர, மற்ற எட்டு அணைகளும் இந்த வலையமைப்பின் ஒரு பகுதி ஆகும் என்பதோடு இவற்றின் மொத்த கொள்ளளவு சுமார் 31.5 ஆயிரம் மில்லியன் கன அடி (TMC) ஆகும்.
நீர் மின் நிலையங்களின் மொத்த ஆற்றல் உற்பத்தித் திறன் 210 மெகாவாட் ஆகும்.
2019 ஆம் ஆண்டில், மாநிலங்களுக்கு இடையேயான நீர் ஒப்பந்தங்கள் குறித்த முதல் அமைச்சர்கள் மாநாட்டில் இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க ஒப்புக் கொள்ளப் பட்டது.
நீராறு-நள்ளாறு பல்நோக்குத் திட்டத்துடன் ஆனைமலையாற்றில் இருந்து 2.5 TMC தண்ணீரைத் தமிழகத்திற்கு திருப்பி விடுவதற்கு கேரள அரசு ஒப்புக் கொண்டால், மேற்கு மாவட்டங்களில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையைக் குறைக்க முடியும்.