TNPSC Thervupettagam

பரம்பிக்குளம் புலிகள் வளங்காப்பகத்தில் விலங்கினக் கணக்கெடுப்பு

February 21 , 2025 2 days 44 0
  • பாலக்காட்டில் உள்ள பரம்பிக்குளம் புலிகள் வளங்காப்பகத்தில் வனத்துறை நடத்திய விலங்கின கணக்கெடுப்பு ஆனது, அப்பாதுகாக்கப்பட்டப் பகுதியின் விலங்கினச் சரி பார்ப்புப் பட்டியலில் 15 புதிய இனங்களைச் சேர்த்துள்ளது.
  • இந்தக் கணக்கெடுப்பில் மொத்தம் 206 பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • இந்தப் புதிய சேர்க்கைகளுடன் சேர்த்து, இந்த வளங்காப்பகத்தில் உள்ள மொத்தப் பறவை இனங்களின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது.
  • இதில் ஐந்து புதிய வண்ணத்துப்பூச்சி இனங்களும் வளங்காப்பகத்தின் சரி பார்ப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இந்த இனங்களின் சேர்க்கையின் மூலம் இவ்வளங்காப்பகத்தில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.
  • மேலும், இந்தக் கணக்கெடுப்பில் மூன்று புதிய இனங்கள் உட்பட சுமார் 39 வகையான தட்டான் இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • அவை இந்த வளங்காப்பகத்தின் சரி பார்ப்புப் பட்டியலில் தட்டான் இனங்களின் எண்ணிக்கையினை 69 ஆக அதிகரிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்