குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் பரம்-காமரூபா எனப்படும் இந்தியாவின் சமீபத்திய மீத்திறன் கணினியினை அறிமுகப்படுத்தினார்.
இது அசாமின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இராச்சியமான காமரூபாவின் பெயரிடப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட கணினித் தொகுதி ஆகும்.
இந்த மீத்திறன் கணினி மையமானது, வடகிழக்குப் பிராந்தியத்தின் வேகமான மற்றும் சக்தி வாய்ந்த மீத்திறன் கணினியான பரம்-இஷானை விஞ்சியுள்ளது.
2016 ஆம் ஆண்டில் கௌஹாத்தியின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பரம்-இஷான் தொடங்கப்பட்டது.
தேசிய மீத்திறன் கணினி திட்டத்தின் (என்எஸ்எம்) கீழ் கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பரம்-காம்ரூபா அமைக்கப்பட்டது.
தேசிய மீத்திறன் கணினி திட்டம் என்பது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் (MeitY) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
நாடு முழுவதும் இதுபோன்ற 15 மீத்திறன் கணினிகள் நிறுவப்பட்டன.