TNPSC Thervupettagam

பரம் சித்தி (PARAM Siddhi) மீத்திறன் கணினி

October 7 , 2020 1421 days 984 0
  • மேம்படுத்தப்பட்ட கணினி வளர்ச்சிக்கான மையமானது (C-DAC - Centre for Development of Advanced Computing) இந்தியாவின் மிகப்பெரிய உயர்-செயல்பாடு கொண்ட கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு மீத்திறன் கணினியைச் (HPC-AI - High-Performance Computing and Artificial Intelligence) செயல்பாட்டுக்குக் கொண்டு வர உள்ளது.
  • இதுபரம் சித்தி - AI” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 210 AI பெட்டாப்ளாப்ஸ் வேகம் கொண்டது.
  • இது உலகளாவிய AI மீத்திறன் கணினி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறையில் சிறந்து விளங்கும் முன்னிலை நாடுகளில் இந்தியாவையும் இணைக்கும்.

இந்தியாவில் உள்ள இதர மீத்திறன் கணினிகள்

  • முதலாவது மீத்திறன் கணினியானதுபரம் சிவேஆகும். இது C-DAC அமைப்பினால் தேசிய மீத்திறன் கணினித் திட்டத்தின் கீழ் கட்டமைக்கப் பட்டு உள்ளது.
  • பிரத்தியூஷ்இது உலகில் 39வது இடத்தைப் பிடித்துள்ளது. இது புனேவின் இந்திய வானிலைக் கல்வி மையத்தில் உள்ளது.
  • மிகிர் என்பது உலகில் 66வது இடத்தைப் பிடித்துள்ளது. இது தேசிய  நடுத்தர வரம்பு கொண்ட வானிலை முன்னறிவிப்பு மையத்தில் அமைந்துள்ளது.
  • InC1 ஆனது 206வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 327வது இடத்தில் உள்ள மீத்திறன் கணினி கல்வி ஆராய்ச்சி மையமானது பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் அமைந்துள்ளது.
  • iDataplex ஆனது 496வது இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்