TNPSC Thervupettagam
November 21 , 2020 1376 days 639 0
  • இது உலகில் மிகவும் சக்தி வாய்ந்த, விநியோகிக்கப்படாத கணினி அமைப்பைக் கொண்ட முதல் 500 கணினிகளைக் கொண்ட பட்டியலில் 63வது இடத்தைப் பிடித்து உள்ளது.
  • ஒரு விநியோகிக்கப்படாத கணினி அமைப்பில் உள்ள அனைத்து கூறுகளும் (சாதனங்களும்) ஒரே இடத்தில் இருக்கும்.
  • பரம் சித்தியைப் பொறுத்த வரையில் அனைத்து சாதனங்களும்  புனேவில் அமைந்து உள்ளன.
  • இது ஒரு உயர் கணினித் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு மீவேகக் கணினி ஆகும்.
  • இது தேசிய மீவேகக் கணினித் திட்டத்தின் கீழ் இருக்கும் மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
  • இது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றினால் கூட்டாக மேம்படுத்தப் பட்டுள்ளது.
  • இந்த மீவேகக் கணினியானது 5.267 பெட்டாபிளாப் (petaflops) வேகத்தைக் கொண்டு ள்ளது.
  • தேசிய மீவேகக் கணினித் திட்டமானது 2015 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
  • இந்தியாவானது தற்பொழுது தேசிய மீவேகக் கணினித் திட்டத்தின் 3வது நிலையை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
  • இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் 3 நிலைகளில் நாட்டில் 70 மீவேகக் கணினிகளை அமைத்தல் என்பதாகும்.
  • முதலாவது மீவேகக் கணினியானது வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
  • இதுபரம் சிவாஎன்று பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்