சுரங்கத் திட்ட இணைய வாயிலை பரிவேஷ் வலைதளத்துடன் இணைக்க நிலக்கரி அமைச்சகமானது திட்டமிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை இணைய வழியில் சமர்ப்பித்தல், கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான ஒற்றை வாயிலாக இது உள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், வணிக ரீதியிலான சுரங்கத்திற்காக வேண்டி 41 நிலக்கரித் தொகுதிகளை ஏலம் விடும் பணியை அரசாங்கம் தொடங்கியது.
இது இந்தியாவின் நிலக்கரித் துறையைத் தனியாருக்கு அனுமதியளிக்கும் ஒரு மிகப்பெரிய நடவடிக்கையாகும்.