TNPSC Thervupettagam
January 5 , 2019 2152 days 803 0
  • தொழிலகங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாக மற்றும் விரைவாக வழங்குவதற்காக வலைதள அடிப்படையிலான ஒற்றைச் சாளர அமைப்பான பரிவேஷ் என்ற வசதி அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 15 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது.
  • ஊடாடும், நல்ல மற்றும் சுற்றுச்சூழல் ஒற்றைச் சாளர மையம் மூலமாக செயல்திறன் மற்றும் பொறுப்பான வசதி என்பது பரிவேஷ் என்ற சொல்லின் விளக்கமாகும் (Parivesh - Pro-Active and Responsive facilitation by Interactive, Virtuous and Environmental Single-window Hub).
  • இந்த அமைப்பானது, தேசிய தகவல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
  • இது பல்வேறு ஆணையங்களிடமிருந்து சுற்றுச்சூழல், வனங்கள், வன உயிரிகள் மற்றும் கடலோர ஒழுங்காற்றுப் பகுதி ஆகியவற்றின் ஒப்புதலுக்காக ஏற்படுத்தப்படும் முன்மொழிவுகளை சமர்ப்பித்தல், ஒப்புதல் பெறுதல், முன்மொழிதல் ஆகியவற்றினைக் கண்காணிப்பதற்கான ஒரு தானியங்கி அமைப்பாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்