TNPSC Thervupettagam

பருப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டம்

February 21 , 2024 281 days 325 0
  • பயறு போன்ற பருப்பு வகைகளை உள்நாட்டில் பயிரிடுவதை ஊக்குவிக்கவும், வழக்கமாகப் பயிரிடும் பயிர்களுக்குப் பதிலாக பருப்பு வகைகளைப் பயிரிடுவதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கவும் மத்திய அரசு புதியக் கொள்கையை வகுத்துள்ளது.
  • பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காகவும், ஒவ்வோர் ஆண்டும் மேற் கொள்ளப்படும் பெருமளவிலான இறக்குமதியை நன்கு குறைக்கச் செய்வதற்காகவும், இந்தியாவின் பருப்பு உற்பத்தியை உயர்த்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியத் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலையில் (MSP) கொள்முதல் செய்வதை உறுதி செய்வதற்காக விவசாயிகளுடன் 5 ஆண்டு கால ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்.
  • 2027 ஆம் ஆண்டிற்குள் பருப்பு வகைகளின் உற்பத்தியில் மிகத் தன்னிறைவு அடையச் செய்வதற்கான ஒரு செயல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்