TNPSC Thervupettagam

பருவநிலைக்கான சதுப்புநிலக் காடுகள் கூட்டணி

November 16 , 2022 613 days 300 0
  • COP27 மாநாட்டில், இந்திய நாட்டினை ஒரு பங்குதாரராகக் கொண்டு பருவ நிலைக்கான சதுப்புநிலக் காடுகள் கூட்டணி (MAC) தொடங்கப்பட்டது.
  • இது சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான முன்னேற்றத்தை விரிவுபடுத்தவும் விரைவுபடுத்தவும் முயல்கின்ற ஒரு அரசுகளுக்கு இடையேயான ஒரு கூட்டணியாகும்.
  • இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின் மற்றும் இலங்கை ஆகிய ஐந்து நாடுகள் பருவநிலைக்கான சதுப்புநிலக் காடுகள் கூட்டணியில் இணைந்துள்ளன.
  • இது இயற்கை அடிப்படையிலான பருவநிலை மாற்றத்திற்கான ஒரு தீர்வாக சதுப்பு நிலங்கள் ஆற்றும் பங்கு பற்றி உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலக அளவில் சதுப்புநிலக் காடுகளைப் புணரமைப்பதனையும் உறுதி செய்யும்.
  • சதுப்பு நிலங்கள் உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளிலும், 123 நாடுகளிலும் பரவிக் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்