TNPSC Thervupettagam

பருவநிலையின் நிலை குறித்த அறிக்கை 2024

November 16 , 2024 6 days 93 0
  • அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவ நிலை மாநாட்டின் (COP29) போது உலக வானிலை அமைப்பின் (WMO) 2024 ஆம் ஆண்டு பருவ நிலையின் நிலை குறித்த அறிக்கையானது வெளியிடப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டு ஆனது இதுவரையில் பதிவான ஒரு வெப்பமான ஆண்டாக இருக்கும் என்பதால் இந்த அறிக்கை ஒரு சிவப்பு (அபாய) எச்சரிக்கையை வெளியிட்டது.
  • இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில், உலக சராசரி வெப்பநிலை என்பது தொழில்துறை காலத்திற்கு முந்தைய காலத்தில் பதிவான ஒரு அளவை விட 1.54 டிகிரி அதிகமாக இருந்தது.
  • இருப்பினும், பல தசாப்தங்களாக நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் வெப்ப மயமாதல் தடுப்பு நடவடிக்கைகள் ஆனது இந்த வெப்பநிலையினை 1.5 டிகிரிக்கு கீழே கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • WMO அறிக்கையானது, 2014-2023 காலக் கட்டம் வரையில், உலகளாவியச் சராசரி கடல் மட்டம் ஆண்டிற்கு 4.77 மில்லி மீட்டர் உயர்ந்துள்ளதாக கூறுகிறது.
  • 1993 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் இருந்த விகிதத்தை விட இது இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
  • ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 93% நாட்களில் இந்தியா தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர் கொண்டது.
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை 34 நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர் கொண்டதால், அவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும்.
  • அவற்றைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகியவை முறையே 27 மற்றும் 26 நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர் கொண்டன.
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் நிலவரப்படி 55% நாடுகளில் மட்டுமே பல் இடர் முன்னெச்சரிக்கை அமைப்பு (MHEWS) உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்