அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பருவ நிலை மாநாட்டின் (COP29) போது உலக வானிலை அமைப்பின் (WMO) 2024 ஆம் ஆண்டு பருவ நிலையின் நிலை குறித்த அறிக்கையானது வெளியிடப்பட்டது.
2024 ஆம் ஆண்டு ஆனது இதுவரையில் பதிவான ஒரு வெப்பமான ஆண்டாக இருக்கும் என்பதால் இந்த அறிக்கை ஒரு சிவப்பு (அபாய) எச்சரிக்கையை வெளியிட்டது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில், உலக சராசரி வெப்பநிலை என்பது தொழில்துறை காலத்திற்கு முந்தைய காலத்தில் பதிவான ஒரு அளவை விட 1.54 டிகிரி அதிகமாக இருந்தது.
இருப்பினும், பல தசாப்தங்களாக நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் வெப்ப மயமாதல் தடுப்பு நடவடிக்கைகள் ஆனது இந்த வெப்பநிலையினை 1.5 டிகிரிக்கு கீழே கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
WMO அறிக்கையானது, 2014-2023 காலக் கட்டம் வரையில், உலகளாவியச் சராசரி கடல் மட்டம் ஆண்டிற்கு 4.77 மில்லி மீட்டர் உயர்ந்துள்ளதாக கூறுகிறது.
1993 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் இருந்த விகிதத்தை விட இது இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுமார் 93% நாட்களில் இந்தியா தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர் கொண்டது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை 34 நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர் கொண்டதால், அவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களாகும்.
அவற்றைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகியவை முறையே 27 மற்றும் 26 நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர் கொண்டன.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் நிலவரப்படி 55% நாடுகளில் மட்டுமே பல் இடர் முன்னெச்சரிக்கை அமைப்பு (MHEWS) உள்ளது.