TNPSC Thervupettagam

பருவநிலை உயர்லட்சிய உச்சி மாநாடு (CAS) 2023

September 24 , 2023 429 days 263 0
  • பருவநிலை உயர்லட்சிய உச்சி மாநாடு (CAS) ஆனது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஒரு பகுதியாக நியூயார்க் நகரில் நடைபெற்றது.
  • இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு 34 அரசுகள் மற்றும் 7 நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர்.
  • சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
  • உலகளாவியப் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் இவை கூட்டாக 42% பங்கைக் கொண்டுள்ளதோடு, மேலும் அவை பசுமை இல்ல வாயு உமிழ்வில் முதல் மூன்று இடங்களில் உள்ள நாடுகளாகும்.
  • இந்தியா, உமிழ்வுச் செறிவினை 2030 ஆம் ஆண்டில் 2005 ஆம் ஆண்டின் போது இருந்த அளவிலிருந்து 45% ஆக குறைப்பதாக (2015 ஆம் ஆண்டில் தான் ஒப்புக் கொண்டதை விட 10% அதிகமாக) 2022 ஆம் ஆண்டில் தனது பருவநிலை உறுதிப்பாடுகளைப் புதுப்பித்தது.
  • நேபாளம் மற்றும் போர்ச்சுகல் ஆகியவை முன்னதாக அறிவிக்கப்பட்ட இலக்கான 2050 ஆம் ஆண்டிற்குப் பதிலாக 2045 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வு நிலையை அடைவதற்கான தனது திருத்தப்பட்ட இலக்கினைத் தற்போது அறிவித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்