பருவநிலை குறிகாட்டிகள் மற்றும் நிலையான மேம்பாட்டு அறிக்கை
September 26 , 2021 1030 days 512 0
உலக வானிலை அமைப்பானது ஒரு புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு “பருவநிலை குறிகாட்டிகள் மற்றும் நிலையான மேம்பாடு : ஒருங்கிணைவின் செயல்விளக்கம்” (Climate Indicators and Sustainable Development: Demonstrating the Interconnections) என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவியப் பருவநிலைக்கும் நிலையான மேம்பாட்டு இலக்கிற்கும் இடையிலான தொடர்பினை விளக்கிக் காட்டும் நோக்கத்தோடு இந்த அறிக்கையினை உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ளது.
தற்போதைய நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பமயமாதலை 2°C வரை குறைக்கவோ (அ) 1.5°C வரை குறைக்கவோ இது முயல்கிறது.