TNPSC Thervupettagam

பருவநிலை சார்ந்த திறன்மிகு கோதுமை வகை

February 26 , 2023 643 days 323 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமானது, HD-3410 வகையினைப் போன்ற அதே விளைச்சல் திறன் கொண்ட, வெறும் 95 செ.மீ. உயரம் கொண்ட தாவரமான மற்றும் வலுவான தண்டுகள் உடைய HD-3385 எனப்படும் மூன்றாவது கோதுமை வகையினை உருவாக்கியுள்ளது.
  • இது குறைந்தபட்சம் தண்டு வீழ்ச்சித் தன்மை கொண்ட, முன்கூட்டியே விதைப்புக்கு மிகவும் ஏற்ற வகையாகும்.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமானது, தாவர வகைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் (PPVFRA) HD-3385 என்ற வகை ஒன்றினைப் பதிவு செய்துள்ளது.
  • இந்தப் புதிய வகை கோதுமையானது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவும் அதிக வெப்பநிலையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக புது டெல்லியில் உள்ள, இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் (IARI) இரண்டு கோதுமை வகைகளை உருவாக்கியுள்ளனர்.
  • HDCSW-18 எனப்படும் முதல் வகையானது 2016 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.
  • இது ஒரு ஹெக்டேருக்கு 7 டன்களுக்கும் அதிகமான அளவில் கோதுமை விளைச்சல் தரக் கூடியது.
  • ஆனால் தாவரங்களின் உயரம் காரணமாக கதிர் முற்றிய நிலையில் அவை கீழே சாயக் கூடியதாக உள்ளன.
  • HD-3410 எனப்படும் இரண்டாவது வகையானது, 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • இது குறைவான தாவர உயரத்துடன் (100-105 செ.மீ) அதிக மகசூல் திறன் (7.5 டன் / ஹெக்டேர்) கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்