பருவநிலை மற்றும் நீடித்த மேம்பாட்டிற்கான ஆப்பிரிக்க மையம்
February 1 , 2019 2126 days 580 0
இத்தாலிய பிரதம மந்திரி கியுசெப்பி காண்டி ரோம் நகரத்தில் பருவநிலை மற்றும் நீடித்த மேம்பாட்டிற்கான ஆப்பிரிக்க மையத்தைத் திறந்து வைத்திருக்கின்றார்.
இந்த மையம் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UN Development Programme - UNDP) மற்றும் உணவு விவசாய அமைப்பு (Food & Agricultural Organisation - FAO) ஆகியவற்றுடன் இணைந்து இத்தாலிய அரசால் நிறுவப்பட்டிருக்கின்றது.
இந்த மையம் பாரீஸ் ஒப்பந்தத்தாலும் 2030 தீர்மானத்தாலும் ஏற்படுத்தப்பட்ட இலக்குகளை அடைய G7 நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் பொதுவான முயற்சிகளுக்கான ஒத்துழைப்பை நல்கும்.