பருவநிலை மற்றும் பேரழிவுகள் குறித்த தகவல்கள் அறிக்கை
February 17 , 2024 281 days 348 0
இடர்-தணிப்பு சேவை வழங்கும் நிறுவனமான Aon PLC ஆனது, 2024 ஆம் ஆண்டு பருவ நிலை மற்றும் பேரழிவுகள் குறித்த தகவல்கள் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் உலகளவில் 380 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்திய 398 இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டன.
இது 2022 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 355 பில்லியன் பொருளாதார இழப்பை விட அதிகமாகும்.
2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 66 இயற்கைப் பேரழிவுகளில் 95 சதவீதப் பேரிடர்கள் வானிலை தொடர்பான பல காரணிகளால் ஏற்பட்டவை என்பதால் இதன் விளைவாக சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டது.
2023 ஆம் ஆண்டில் வானிலை மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளில் 40 சதவிகித இழப்புகளுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டது.
ஏற்பட்ட மொத்த சேதங்களில் 118 பில்லியன் டாலர் அல்லது 31 சதவீதம் மட்டுமே காப்பீடு செலுத்தப் பட்டது.
2023 ஆம் ஆண்டில் வெள்ளப் பாதிப்பு இழப்புகளில் பெரும்பாலானவை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த நாடுகளில் காப்பீட்டு வழங்கீட்டு வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது.
பருவகால வெள்ளப் பாதிப்பு ஆனது சுமார் 300 மில்லியன் டாலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்திய இந்திய நாடுகளும் இதில் அடங்கும்.
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 2,653 பேர் கொல்லப் பட்டனர்.