TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு 2025

November 26 , 2024 27 days 133 0
  • பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு (CCPI 2025) அறிக்கையானது, அசர்பைஜான் நாட்டில் பாகுவில் நடைபெற்ற வருடாந்திர ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாநாட்டில் வெளியிடப்பட்டது.
  • பருவநிலை மாற்றத்தினை எதிர்த்துப் போராடுவதற்கான பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட 60 நாடுகளின் பட்டியலில் இந்தியா 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இப் பட்டியலின் முதல் மூன்று இடங்கள் காலியாக விடப்பட்டுள்ள நிலையில்  அதைத் தொடர்ந்து டென்மார்க் (நான்காவது இடம்) மற்றும் நெதர்லாந்து (ஐந்தாவது இடம்) ஆகியன இடம் பெற்றுள்ளன.
  • மிகப்பெரிய அளவில் உமிழ்வினை வெளியிடும் இரண்டு நாடுகள் ஆன சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை முறையே மிக குறைவான செயல் திறனுடன் 55 மற்றும் 57வது இடங்களில் உள்ளன.
  • இந்தியாவின் தனிநபர் உமிழ்வுகள் ஆனது கார்பன் டை ஆக்சைடுக்கு சமமான (tCO2e) 2.9 டன் ஆக உள்ளதோடு இது உலகச் சராசரியான சுமார் 6.6 tCO2e அளவை விட மிகக் குறைவாக உள்ளது.
  • CCPI குறியீட்டில், இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை மட்டுமே மிக அதிகச் செயல்திறன் கொண்ட இரண்டு G20 நாடுகளாகும்.
  • CCPI குறியீட்டில் குறைந்தத் தரவரிசையில் உள்ள நான்கு நாடுகள் ஈரான் (67வது), சவுதி அரேபியா (66வது), ஐக்கிய அரபு அமீரகம் (65வது), மற்றும் ரஷ்யா (64வது) ஆகியன ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்