TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றத்தினால் நிகழும் விலங்குகளின் இடமாற்றம்

November 14 , 2023 249 days 174 0
  • ஒரு புதியப் பகுப்பாய்வு ஆனது, பருவ நிலை மாற்றத்துடன் தொடர்புடைய தீவிர வானிலையானது அயல்நாட்டு உயிரினங்களை விட உள்நாட்டு உயிரினங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கலாம் என்று கூறுகிறது.
  • வெப்ப அலைகள், குளிர் காலங்கள், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளில் உள்நாட்டு உயிரினங்களை விட அயல்நாட்டு உயிரினங்கள் சிறப்பாக இயங்குகின்றன.
  • அவற்றால் புதிய சூழல்களில் அதன் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்க முடிகிறது என்பதோடு உள்நாட்டு உயிரினங்கள் மோசமாக பாதிக்கப்படும் போதும் இவற்றால் செழித்து வாழ முடிகிறது.
  • உள்நாட்டு நிலவாழ் விலங்குகள் முதன்மையாக வெப்ப அலைகள், குளிர் காலங்கள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்படக் கூடியவை.
  • உள்நாட்டு நன்னீர்வாழ் விலங்குகள் குளிர் காலங்களைத் தவிர, மிகவும் தீவிரப் பருவ கால நிகழ்வுகளால் எளிதில் பாதிக்கப்படுகின்றன.
  • ஆனால் அயல்நாட்டு நிலவாழ் விலங்குகள் என்பவை முதன்மையாக வெப்ப அலைகளால் பாதிக்கப் படுகின்றன என்பதோடு மேலும் அயல்நாட்டு நன்னீர் வாழ் விலங்குகள் முதன்மையாக புயல்களால் பாதிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்