இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது, முதன்முறையாக, பருவநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கங்களுக்கு எதிரான உரிமையை அங்கீகரித்துள்ளது.
இந்த உரிமையானது இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்வு உரிமை மற்றும் சமத்துவ உரிமை ஆகியவற்றுடன் ஒன்றிணைந்துள்ளதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறுகிறது.
21வது பிரிவானது வாழ்வு உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திர உரிமையினை அங்கீகரிக்கிற அதே சமயம் 14வது சட்டப் பிரிவு ஆனது, சட்டத்தின் முன் அனைத்து நபர்களும் சமம் மற்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.
இந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் ஆனது தூய்மையான சுற்றுச் சூழலுக்கான உரிமை மற்றும் பருவநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளுக்கு எதிரான உரிமை ஆகியவற்றின் முக்கிய ஆதாரங்களாக உள்ளன என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியது.
அரசியலமைப்பின் 48A சட்டப் பிரிவு ஆனது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், நாட்டிலுள்ள காடுகள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது.
காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும், உயிரினங்கள் மீது கருணை காட்டுவதும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்று 51Aவது சட்டப் பிரிவின் உட்பிரிவு (g) கூறுகிறது.