தமிழ்நாடு அரசானது, அதன் பருவநிலை மாற்றம் குறித்த மாநில செயல் திட்டத்தினை (SAPCC) இறுதி செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஒப்புதலுக்காக வேண்டி சமர்ப்பித்துள்ளது.
பருவநிலை மாற்றத்திற்கான ஒரு பிரத்தியேக திட்டத்தினைத் தொடங்கி அதற்கு நிதி ஒதுக்கீட்டைச் செய்த முதல் இந்திய மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
SAPCC என்பது பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் முக்கியத் துறைகளுக்கு வெவ்வேறு தணிப்பு மற்றும் தகவமைப்பு உத்திகளை வகுக்கும் ஒரு முக்கிய ஆவணம் ஆகும்.
இது வேளாண்மை, நீர்வளம், கடலோரப் பகுதி மேலாண்மை, காடு மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
தமிழ்நாடு மாநிலமானது, இந்தியாவின் நிலப்பரப்பில் 4% பங்கினை கொண்டுள்ளது என்பதோடு இந்தியாவின் மக்கள்தொகையில் 6% பேர் தமிழகத்தில் வசிக்கின்றனர், ஆனால் இம்மாநிலம் இந்தியாவின் நீர் வளங்களில் 2.5% பங்கினை மட்டுமே கொண்டு உள்ளது.
மேற்பரப்பு நீர் வளங்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை மற்றும் நிலத்தடி நீரில் 80% ஆனது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விட்டன.
தேசியச் சராசரியான 2,200 மீ3 என்ற அளவுடன் உடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் உள்ள நீர்வளங்களின் தனிநபர் கிடைக்கும் தன்மை 900 மீ3 மட்டுமேயாகும்.