TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றம் மீதான சர்வதேச மாநாடு – நேபாளம்

December 7 , 2017 2574 days 887 0
  • பருவநிலை மாற்றம் மீதான சர்வதேச மாநாடு நேபாளத்தில் அண்மையில் நடைபெற்றது.
  • நான்கு நாள் நடைபெற்ற இம்மாநாட்டில் பருவநிலை மாநாடு மற்றும் உலக வெப்ப மயமாதலினால் இந்துகுஷ் மலைத்தொடர்களில் உண்டாகும் பாதக விளைவுகள் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது.
  • நேபாளத்தின் முதல் பெண் அதிபர் மற்றும் தற்போதைய இரண்டாவது நேபாள அதிபரான பித்யா பண்டாரி இம்மாநாட்டை தொடங்கி வைத்தார்.
  • ஒருங்கிணைந்த மலைகள் மேம்பாட்டிற்கான சர்வதேச மையத்தினோடு [International Centre for Integrated Mountain Development] சேர்ந்து நேபாளத்தின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இம்மாநாட்டை நடத்தியுள்ளது.
  • ஆப்கான் தொடங்கி மியான்மர் வரை அமைந்துள்ள மலைத்தொடரே இந்துகுஷ் இமயத் தொடராகும்.
  • ஆசியாவின் 10 முக்கிய நிதி அமைப்புகளின் ஆதாரமாகவும், 210 மில்லியன் மக்களுக்கு சுற்றுச்சூழல் சேவை, தண்ணீர் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை அளிப்பானாகவும் இந்துகுஷ் மலைத்தொடர் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்