உலகளாவியப் பருவநிலை நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்காக வேண்டி, ஒரு புதிய சர்வதேச அமைப்பை உருவாக்கப் பிரேசில் அரசு முன்மொழிந்துள்ளது.
இந்தத் திட்டமானது 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வடக்குப் பிரேசிலின் பெலம் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மீதான மாநாட்டுக்கு (பங்குதாரர்கள் மாநாடு - COP30) முன்னதாக பகிரப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு மீதான உடன்படிக்கையின் (UNFCCC) கீழ் "பருவநிலை மாற்ற மன்றம்" என்ற ஓர் அமைப்பினை நிறுவ இந்தத் திட்டம் பரிந்துரைக்கிறது.
இந்த மன்றமானது COP கூட்டங்களில் எடுக்கப்படும் பல முடிவுகளை மிக விரைவாகக் கண்காணிப்பதையும், சர்வதேச முன்னெடுப்புகளை சிறப்பாக ஒருங்கிணைக்கச் செய்வதையும், பருவநிலை நடவடிக்கையை மேலும் திறம்பட மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.