TNPSC Thervupettagam

பருவநிலை மீறல் மீதான அரசின் பொறுப்பு

August 26 , 2023 461 days 274 0
  • அமெரிக்காவின் மொன்டானாவின் மிசோலா எனுமிடத்தில் வசிக்கும் ஒரு குழுவினர், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலுக்கான அரசியலமைப்பு உரிமையை மீறியதற்காக தங்கள் சொந்த மாகாண அரசின் மீது வெற்றிகரமாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர்.
  • புதைபடிவ எரிபொருள் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் போது, அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதில் அரசு காட்டும் அலட்சியம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • ஓர் அமெரிக்க நீதிமன்றமானது, பருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் அரசியல் அமைப்பை மீறியதற்காக ஒரு அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியது இதுவே முதல் முறையாகும்.
  • இந்தத் தீர்ப்பு சுற்றுச்சூழல் இயக்கத்தை மேலும் ஊக்குவிக்கும் என்பதோடு நாட்டில் நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான காலநிலை மாற்ற வழக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்