TNPSC Thervupettagam

பருவநிலை வெளிப்படைத்தன்மை அறிக்கை - 2022

October 29 , 2022 631 days 301 0
  • 8வது பருவநிலை வெளிப்படைத்தன்மை அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • சீனா, இந்தோனேசியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை புதைபடிவ எரி பொருட்களுக்கான அதிக மொத்த மானியங்களைக் கொண்ட G20 அமைப்பின் உறுப்பினர்கள் நாடுகள் ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டில், மின்சாரம் மற்றும் மனை விற்பனைத் துறையில் மாசு உமிழ்வு பெருந் தொற்றுக் காலத்திற்கு முந்தைய அளவை விட அதிகமாக இருந்தது.
  • சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில், இந்தத் துறைகளில் பதிவான தனிநபர் உமிழ்வு தற்போது 2019 ஆம் ஆண்டின் அளவை விட அதிகமாக உள்ளது.
  • ஐக்கியப் பேரரசு (67 சதவீதம்), ஜப்பான் (48 சதவீதம்) மற்றும் மெக்சிகோ (40 சதவீதம்) ஆகியவை புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பங்கில் அதிக அதிகரிப்பு கொண்ட நாடுகள் ஆகும்.
  • ரஷ்யா (16 சதவீதம்) மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் (14 சதவீதம்) மிகக் குறைந்த அதிகரிப்பு ஆனது பதிவானது.
  • 2021 ஆம் ஆண்டில் பதிவான கடுமையான வெப்பம் காரணமாக சேவை, உற்பத்தி, விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் இந்தியா 159 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வருமான இழப்பைச் சந்தித்துள்ளது.
  • இது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவீதமாகும்.
  • இந்தியாவில் பதிவான அதிக வெப்ப வெளிப்பாடு 1990-1999 ஆகிய ஆண்டுகளில் இருந்து 39 சதவீதம் அளவிலான அதிகரிப்புடன், 167 பில்லியன் அளவிலான திறன்மிகு உழைப்பு நேரத்தை இழக்கச் செய்தது.
  • உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், நாட்டில் தொழிலாளர் உற்பத்தித் திறன் 1986-2006 ஆம் ஆண்டுகளில் இருந்த அளவில் இருந்து 5 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்