பர்தா வனவிலங்குச் சரணாலயமானது (BWLS) கிர் தேசியப் பூங்கா மற்றும் சரணாலயத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஆசியச் சிங்கங்களின் இரண்டாவது வாழிடமாக மாற உள்ளது.
குஜராத் மாநில வனத் துறையானது “சிங்க வளங்காப்பு @ 2047” திட்டத்தின் ஒரு பகுதியாக பர்தா வனவிலங்குச் சரணாலயத்தினைச் சிங்கங்களின் இரண்டாவது வாழிடமாக மாற்றுவதற்கான தனது திட்டத்தை முன்வைத்துள்ளது.
சிங்க வளங்காப்புத் திட்டம் என்பது ஆசியச் சிங்கம் மற்றும் அதன் வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கும் அவற்றின் வளத்தினைக் காப்பதற்கும் 2021 ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பு ஆகும்.
இது போர்பந்தரிலிருந்து தோராயமாக 15 கிலோமீட்டர் தொலைவிலும், குஜராத்தின் கிர் வன தேசியப் பூங்காவிற்கு மேற்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது.
1979 ஆம் ஆண்டு வனவிலங்குச் சரணாலயமாக நிறுவப்பட்டதற்கு முன்பு, பர்தா வனவிலங்குச் சரணாலயமானது போர்பந்தர் மற்றும் ஜாம்நகருக்கான தனியார் வளம் காப்பகமாக இருந்தது.