TNPSC Thervupettagam

பர்புரோகலின் நிறமி

June 24 , 2024 153 days 166 0
  • அறிவியலாளர்கள் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஊதா நிறப் பாசிகளின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் ஆனது பரிணாமம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய முக்கியக் கருத்தாக்கத்திற்கு சவால் விடுக்கிறது.
  • சிறியதாக இருந்தாலும், இந்தப் பாசிகள் அவை வாழும் பனிப்பாறைகளில் வியத்தகு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
  • கோடைகாலத்தில் பனிப்பாறைகள் உருகும் பருவத்தில் பனிப்பாறைகளில் திரவ நீர் உருவாவதால், ஊதா நிறப் பாசிகளின் உருவாக்கம் ஆனது பனியின் மேற்பரப்பைக் கருமையாக்கி, அவை உருகும் வேகத்தைத் துரிதப்படுத்துகிறது.
  • சூரியத் திரை போல செயல்படும் பனிப்பாறையின் ஊதா நிறம் ஆனது, நிறமி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள புதிய மரபணுக்களால் உருவாக்கப்பட்டது.
  • பர்புரோகலின் எனப்படும் இந்த நிறமியானது, பாசி திசுக்களை புற ஊதா (UV) மற்றும் கட்புலனாகும் ஒளிகளின் சேதத்திலிருந்துப் பாதுகாக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்