TNPSC Thervupettagam

பர்யதான் பார்வ்

October 5 , 2017 2479 days 775 0
  • சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் சிறப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக “அனைவருக்குமான சுற்றுலா” (Tourism For All) எனும் கொள்கையை வலுப்படுத்தவும், சுற்றுலாவினால் உண்டாகும் பயன்கள் மீது கவனத்தை கொண்டு வரவும், நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை காட்சிப்படுத்தவும் “பர்யதான் பார்வ்” எனும் 21 நாள் (5th அக்டோபர் - 25 th அக்டோபர்) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்திய அருங்காட்சியங்கள், பிற மத்திய அமைச்சகங்கள், மாநில சுற்றுலாத் துறை அமைச்சகங்கள், விடுதிகள் மேலாண்மை நிறுவனம், பயணம் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மத்திய சுற்றுலா அமைச்சகம் இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • பர்யதான் பார்வ் திட்டத்தின் மூன்று முக்கிய கூறுகள்.
    • நம் நாட்டை காணுங்கள்.
    • அனைவருக்குமான சுற்றுலா
    • சுற்றுலா மற்றும் ஆளுகை
  • ஏற்கனவே மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள “புராதனங்களை தத்தெடுத்தல்” (Adopt a Heritage) திட்டம் இப்பர்யதான் பார்வ் திட்டத்தின் 21 நாட்களில் முக்கிய புராதன இடங்களில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.
  • மாணவர்கள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் போன்றவற்றை இந்திய புராதன இடங்களைப் பராமரிப்பதில் இன்னும் துடிப்போடு ஈடுபடுவதை ஊக்குவிக்க “Adopt a Heritage” திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்