TNPSC Thervupettagam

பறவைக் காய்ச்சல் தொடர்பான இந்தியாவின் சுய அறிவிப்பு

November 2 , 2023 262 days 304 0
  • உலக விலங்கு நல அமைப்பு (WOAH) ஆனது, அதிக தொற்றினை ஏற்படுத்தும் பறவைக் காய்ச்சல் (HPAI) அற்றதாக அறிவித்த இந்தியாவின் சுய-அறிவிப்பிற்கு வேண்டி அதன் ஒப்புதலை அளித்துள்ளது.
  • HPAI ஆனது பொதுவாக பறவைக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
  • மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட கோழி வளர்ப்புப் பண்ணை அமைந்த பகுதிகள் (அங்கீகரிக்கப்பட்ட பண்ணைகள்) மட்டுமே இதில் அடங்கும்.
  • இந்தியா இந்த நான்கு மாநிலங்களில் அமைந்துள்ள 26 கோழி வளர்ப்புப் பண்ணைகள்  HPAI பாதிப்பற்றதாக ஒரு சுய பிரகடனத்தை உலக விலங்கு நல அமைப்பிடம் சமர்ப்பித்தது.
  • இந்தியா தற்போது முட்டை உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் (130 பில்லியன்), கோழி இறைச்சி உற்பத்தியில் ஐந்தாவது இடத்திலும் (4.5 மில்லியன் டன்கள்) உள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில், இந்தியா 64 நாடுகளுக்கு கோழி இறைச்சி மற்றும் கோழி இறைச்சிப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம், 134 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயினை ஈட்டியுள்ளது.
  • பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஆனது இந்தியாவில் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிராவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்