இந்தோனேசியா நாட்டினால் நடத்தப் படுகின்ற பலதரப்புக் கடற்படைப் பயிற்சியில் சீனா தனது போர்க் கப்பல்களுடன் பங்கேற்கிறது.
வட கொரியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக இந்த கொமோடோ கடற்பயிற்சியானது, கோவிட்-19 தொடர்பான நடவடிக்கையால் இடைநிறுத்தப் படுவதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
இது தவிர, கம்போடியா, லாவோஸ், மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய சில நாடுகளுடன் இணைந்து அமானா யூயி-2023 என்ற ஒரு கூட்டுப் பயிற்சியை மேற் கொள்வதற்கும் சீன இராணுவம் திட்டமிட்டுள்ளது.