கிழக்கு கடற்கரை ரயில்வேயானது கழிவிலிருந்து ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான இந்திய ரயில்வேத் துறையின் முதலாவது ஆலையைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் இது போன்று அமைந்துள்ள நான்காவது ஆலை இதுவாகும்.
இந்த ஆலையானது பலபடி விரிசல் தொழில்நுட்பத்துடன் ரூ. 1.79 கோடி செலவில் அமைக்கப் பட்டுள்ளது.
பலபடி விரிசல் தொழில்நுட்பத்தில், கழிவுகள் 24 மணி நேரத்தில் பதப்படுத்தப் பட்டு சீர்திருத்தப் படுகின்றன.
இந்தத் தொழில்நுட்பமானது பலபடி நீக்கம், விரிசல், சீர்திருத்தம், தேய்த்துத் தூய்மைப் படுத்துதல், துகள் வடிகட்டுதல் மற்றும் விரைவாக தணித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
இந்த முறையில் முன்கூட்டியே பிரித்தெடுத்தலானது தேவையில்லை என்பது இந்த முறையின் முக்கியப் பயன்பாடாகும்.