TNPSC Thervupettagam

பலமு புலிகள் சரணாலயம் 2025 நிலை

February 28 , 2025 4 days 66 0
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதன்முறையாக, பலமு புலிகள் சரணாலயத்திலிருந்து (PTR) வெளியேறிய புலி ஆனது அதன் சொந்தப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது.
  • சில மாதங்களுக்கு முன்பு அந்தப் புலி ஆனது இங்கிருந்து வெளியேறி, ஜார்க்கண்டில் உள்ள டால்மா வனவிலங்கு சரணாலயத்திலும் மேற்கு வங்காளத்தின் புருலியாவிலும் அலைந்து திரிந்தது.
  • இறுதியாக டால்மா வனவிலங்கு சரணாலயத்தில் வசித்து வந்த அப்புலி, உணவின்றி, அறிமுகமில்லாத காட்டில் வசிக்கப் போராடியது.
  • ஜாம்ஷெட்பூரில் அமைந்துள்ள டால்மா வனவிலங்கு சரணாலயம் (தங்குமிடம்) ஆனது யானைகளின் வாழ்விடத்திற்குப் பிரபலமானதாகும்.
  • பலமு புலிகள் சரணாலயம் ஆனது, கால்தட எண்ணிக்கையின் அடிப்படையில் புலிகள் கணக்கெடுப்பு  மேற்கொள்ளப்பட்ட உலகின் முதல் சரணாலயமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்