TNPSC Thervupettagam

பலாவு – சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்துப் பாதுகாப்பு அளிக்கும் பொருள்களுக்குத் தடை

January 5 , 2020 1789 days 616 0
  • பசிபிக் தீவில் உள்ள  ஒரு நாடான பலாவு நாடானது பவளப் பாறைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்துப் பாதுகாப்பு அளிக்கும் பொருள்களுக்குத் தடை  விதித்த  முதலாவது நாடாக உருவெடுத்துள்ளது.
  • பவளப் பாறைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆக்ஸிபென்சோன், எத்தில் பாராபென், ஆக்டினாக்ஸேட், பியூட்டில் பாராபென் போன்ற 10 பொருட்களை அந்நாடு தடை செய்துள்ளது. இந்தப் பொருட்கள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றன.
  • சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்துப் பாதுகாப்பு அளிக்கும் பொருள்கள் புற ஊதாக் கதிர்வீச்சை உறிஞ்சி, அவை பவளப் பாறைகளை நிறம் இழக்கச் செய்யும் திறன் கொண்டவையாகும்.

பலாவு நாட்டைப் பற்றி

  • பலாவுவில் உள்ள ராக் தீவுகள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாக விளங்குகின்றன.
  • பிஜிக்குப் பிறகு பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட இரண்டாவது நாடு பலாவு நாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்