சர்வதேசக் கிரிக்கெட் குழு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் MS தோனியின் விக்கெட் கையுறைகளிலிருந்து இராணுவ முத்திரையை நீக்கிட கேட்டுக் கொண்டிருக்கின்றது.
முன்னாள் இந்திய அணித் தலைவரான MS தோனி இந்திய துணை ராணுவ சிறப்புப் படைகளின் பலிதான் முத்திரையுடன் கூடிய விக்கெட் கையுறைகளை அணிந்தவராகக் காணப்பட்டார்.
இது இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் துவக்க ஆட்டத்தின் போது நிகழ்த்தப்பட்டது.
பலிதான் முத்திரை என்பது போர்க்கள குத்துவாள் ஒன்றைக் கீழ்நோக்கிய நிலையில் கொண்டிருக்கும். மேலும் கத்தியின் பக்கவாட்டிலிருந்து மேல் நோக்கிய நிலையில் இரு இறக்கைகளும், அதன் குறுக்கு வெட்டில் பலிதான் என்ற வார்த்தையும் பொறிக்கப்பட்டு இருக்கும்.
பலிதான் என்பதற்கு தியாகம் எனப் பொருள்
தோனி தரைப்படை ராணுவத்தின் பாராசூட் பிரிவில் (வான்குடை மிதவைப் பிரிவு) ஒரு கௌரவ லெப்டினன்ட் கர்னல் ஆவார்.