தமிழகத்தில் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசிற்கு அதிகாரம் அளிக்கும் ஒரு மசோதாவை (தமிழ்நாடுப் பல்கலைக்கழகச் சட்டங்கள் திருத்தம், 2022) தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்றுக் கொண்டது.
இது வரையில் இந்த அதிகாரம் ஆளுநரிடம் இருந்தது.
இது 12 பல்கலைக்கழகங்களுக்குப் பொருந்தும்.
1923 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத்தினைத் திருத்த ஒரு தனி மசோதா உள்ளது.
தமிழ்நாட்டில் 13 பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராகவும், உயர்கல்வித் துறை அமைச்சர் இணை வேந்தராகவும் உள்ளனர்.
குஜராத்தில் 1949 ஆம் ஆண்டு முதல் இந்த அதிகாரத்தை முதல்வர் மட்டுமே கொண்டு உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு இதே போன்ற மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.
இதே நிலைமை தான் தெலங்கானாவிலும் கர்நாடாகாவிலும் உள்ளது.
2019 ஆம் ஆண்டில் மேற்கு வங்கம் ஆளுநரின் இந்த அதிகாரத்தினைப் பறித்தது.
2007 ஆம் ஆண்டில் புஞ்சி ஆணையமும் இதனைப் பரிந்துரை செய்தது.