TNPSC Thervupettagam

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்

April 27 , 2022 947 days 592 0
  • தமிழகத்தில் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசிற்கு அதிகாரம் அளிக்கும் ஒரு மசோதாவை (தமிழ்நாடுப் பல்கலைக்கழகச் சட்டங்கள் திருத்தம், 2022) தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்றுக் கொண்டது.
  • இது வரையில் இந்த அதிகாரம் ஆளுநரிடம் இருந்தது.
  • இது 12 பல்கலைக்கழகங்களுக்குப் பொருந்தும்.
  • 1923 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத்தினைத் திருத்த ஒரு தனி மசோதா உள்ளது.
  • தமிழ்நாட்டில் 13 பல்கலைக் கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராகவும், உயர்கல்வித் துறை அமைச்சர் இணை வேந்தராகவும் உள்ளனர்.
  • குஜராத்தில் 1949 ஆம் ஆண்டு முதல் இந்த அதிகாரத்தை முதல்வர் மட்டுமே கொண்டு உள்ளார்.
  • இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு இதே போன்ற மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.
  • இதே நிலைமை தான் தெலங்கானாவிலும் கர்நாடாகாவிலும் உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் மேற்கு வங்கம் ஆளுநரின் இந்த அதிகாரத்தினைப் பறித்தது.
  • 2007 ஆம் ஆண்டில் புஞ்சி ஆணையமும் இதனைப் பரிந்துரை செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்