பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு இடஒதுக்கீடு விலக்கு மீதான வழி காட்டுதல்கள்
February 7 , 2024 296 days 213 0
பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) சமீபத்திய வரைவு வழிகாட்டுதல்கள் ஆனது, "விதிவிலக்காக விளங்கும் சில சந்தர்ப்பங்களில்" ஒதுக்கப்பட்ட இடங்களை ரத்து செய்யலாம் என்று கூறுகிறது.
விதிவிலக்கான சூழ்நிலைகளில், நேரடி ஆட்சேர்ப்பு விவகாரத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்களை ரத்து செய்வதற்கு பொதுத் தடை இருக்கும் போது, ஒரு பல்கலைக்கழகம் போதுமான விளக்கத்தினை வழங்கினால் அந்த நடவடிக்கையினை மேற்கொள்ள இயலும் என்று வழிகாட்டுதலின் இந்தப் பகுதி கூறுகிறது.
இதில், நேரடி ஆட்சேர்ப்பு என்பது பொது மக்கள் மத்தியில் பணியிடங்கள் குறித்து விளம்பரப் படுத்திய பின்னர் விண்ணப்பங்கள் கோருவதன் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் செயல்முறையாகும்.
மறுபுறம், இட ஒதுக்கீடு ரத்து என்பது, ஆரம்பத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்காக (SC, ST, OBC, EWS பிரிவினர்) ஒதுக்கப்பட்ட, நிரப்புவதற்குப் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டும் காலியாகவே உள்ள ஆசிரியப் பதவிகளை, பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குக் கிடைக்கப் பெறும் என்று அறிவித்தல் ஆகும்.
பல்கலைக்கழக மானியக் குழுவானது, ஏற்கனவே 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைக் கொண்டு உள்ளது.