கல்வி அமைச்சகமும் பல்கலைக்கழக மானியக் குழுவும் இணைந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய மொழிகளில் 22,000 புத்தகங்களை உருவாக்குவதற்காக திட்டம் 16 என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளன.
ASMITA (மொழிப்பெயர்ப்பு மற்றும் கல்வி சார் எழுத்து மூலம் இந்திய மொழிகளில் கல்வி பயன்பாட்டு வசதிகளைப் பெருக்குதல்) என்ற தலைப்பிடப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு மொழியிலும் புத்தகம் எழுதும் செயல்முறைக்குப் பல்கலைக் கழக மானியக் குழு ஒரு சீர்தர இயக்கச் செயல்முறையினை (SOP) உருவாக்கியுள்ளது.