TNPSC Thervupettagam

பல்பரிமாண பாதிப்புக் குறியீடு

August 23 , 2024 92 days 188 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஒரு புதிய தரவு சார்ந்த "பாதிப்பு" குறியீட்டை அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது ஒரு அரசின் கட்டமைப்பு பாதிப்புகள் மற்றும் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெகிழ் திறன் இல்லாமை ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டக் குறிகாட்டிகளை உள்ளடக்கியது.
  • இது சிறிய தீவு நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் குறைந்த வட்டி சார்ந்த நிதி உதவியினைப் பெற உதவும்.
  • "பல்பரிமாண பாதிப்புக் குறியீடு" (MVI) ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் இதர மேம்பாட்டு அளவீடுகளுக்கு ஒரு இணை நிரப்பியாகச் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து, சிறிய வளர்ந்து வரும் தீவு நாடுகள் (SIDS) ஆனது தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் குறைந்த வட்டி சார் மேம்பாட்டு நிதியுதவியை அணுகுவதற்கு என்று போதுமான வறுமை நிலையைக் கொண்டிருக்க வில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்