TNPSC Thervupettagam

பல்பரிமாண வறுமைக் குறியீடு 2023 - இந்தியாவின் நிலை

July 13 , 2023 376 days 520 0
  • உலகளாவியப் பல்பரிமாண வறுமைக் குறியீட்டின் (MPI) சமீபத்தியப் பதிப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்னெடுப்பு (OPHI) ஆகியவற்றினால் வெளியிடப் பட்டது.
  • இந்தியாவில் 2005/2006 முதல் 2019/2021 ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில் மொத்தம் 415 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
  • இந்தியா உட்பட 25 நாடுகள் தங்கள் உலகளாவியப் பல்பரிமாண வறுமைக் குறியீட்டு மதிப்புகளை 15 ஆண்டுகளுக்குள் வெற்றிகரமாக பாதியாகக் குறைத்துள்ளன.
  • இந்த நாடுகளில் கம்போடியா, சீனா, காங்கோ, ஹோண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, மொராக்கோ, செர்பியா மற்றும் வியட்நாம் ஆகியவை அடங்கும்.
  • 2005/2006 ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 645 மில்லியன் மக்கள் பல்பரிமாண வறுமை நிலையில் இருந்தனர்.
  • இந்த எண்ணிக்கையானது 2015/2016 ஆம் ஆண்டில் சுமார் 370 மில்லியனாகவும், 2019 / 2021 ஆம் ஆண்டில் 230 மில்லியனாகவும் குறைந்துள்ளது.
  • இந்தியாவில் 2005/2006 ஆம் ஆண்டில் 44.3% ஆக இருந்த பல்பரிமாண அளவில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மற்றும் ஊட்டச் சத்துக் குறிகாட்டியின் கீழ் பின்தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கையானது 2019/2021 ஆம் ஆண்டில் 11.8% ஆக  குறைந்துள்ளது.
  • குழந்தை இறப்பு விகிதமானது 4.5 சதவீதத்திலிருந்து 1.5% ஆக குறைந்தது.
  • ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மற்றும் சமையல் எரிபொருள் சேவையினைப் பெறாதவர்களின் எண்ணிக்கையானது 52.9% சதவீதத்திலிருந்து 13.9% ஆகக் குறைந்து உள்ளது.
  • 2005/2006 ஆம் ஆண்டில் சுமார் 50.4% ஆக இருந்த தூய்மையான வாழ்வினைப் பெறாத நபர்களின் ஒரு எண்ணிக்கையானது 2019/2021 ஆம் ஆண்டில் 11.3% ஆகக் குறைந்து உள்ளனர்.
  • குடிநீர்ச் சேவைக்கான குறிகாட்டியில், பல்பரிமாண ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மற்றும் பின்தங்கிய மக்களின் எண்ணிக்கையானது சுமார் 16.4 சதவீதத்திலிருந்து 2.7 ஆகவும், மின்சாரச் சேவையில் (29% முதல் 2.1% வரை) மற்றும் வீட்டுவசதிச் சேவையில் 44.9% முதல் 13.6% ஆகவும் குறைந்துள்ளது.
  • அவ்வாறு நடவடிக்கை மேற்கொண்ட 17 நாடுகளில், முதல் காலகட்டத்தில் 25%க்கும் குறைவான தாக்கம் இருந்த நிலையில், இந்தியா மற்றும் காங்கோ ஆகிய நாடுகளில் 50% சதவீதத்திற்கும் மேலான ஆரம்பக் கட்ட தாக்கங்கள் இருந்தன.
  • ஒரு காலகட்டத்தில் உலகளாவியப் பல்பரிமாண வறுமைக் குறியீட்டு (MPI) மதிப்பைப் பாதியாகக் குறைத்த 19 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்