TNPSC Thervupettagam

பல்பரிமாண வறுமைக் குறியீடு 2023

July 14 , 2023 371 days 317 0
  • உலகப் பல்பரிமாண வறுமைக் குறியீடு (MPI) ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்னெடுப்பு அமைப்பு ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • 110 நாடுகளில் வாழும் 6.1 பில்லியன் மக்களில் 1.1 பில்லியன் மக்கள் (18%க்கும் அதிகமானோர்) கடுமையான பல்பரிமாண வறுமை நிலையில் வாழ்கின்றனர்.
  • உலகின் ஒவ்வொரு ஆறு ஏழை மக்களில் தோராயமாக ஐந்து பேர் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதி 534 மில்லியன்) மற்றும் தெற்காசியா (389 மில்லியன்) ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர்.
  • கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஏழை மக்கள் (730 மில்லியன் மக்கள்) நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழ்கின்றனர்.
  • குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் பல்பரிமாண வறுமை நிலையில் சேர்க்கப் பட்டுள்ள மக்கள் தொகையில் 10% மட்டுமே இருந்தாலும், அனைத்து ஏழை மக்களில் 35% பேர் இங்கு வசிக்கின்றனர்.
  • பல்பரிமாண வறுமை நிலையில் உள்ள ஏழை மக்களில் பாதி பேர் (566 மில்லியன்) 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.
  • குழந்தைகள் மத்தியில் நிலவும் வறுமை நிலை விகிதம் 27.7% ஆகவும், வயது வந்தோர் மத்தியில் நிலவும் வறுமை நிலை விகிதம் 13.4% ஆகவும் உள்ளது.
  • 84% ஏழை மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்ற நிலையில், வறுமை நிலையானது கிராமப் புறங்களை அதிகம் பாதிக்கிறது.
  • உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்கள் மிக ஏழ்மையான நிலையில் உள்ளன.
  • கம்போடியா, பெரு மற்றும் நைஜீரியா ஆகிய சில நாடுகள் அவற்றின் மிகச் சமீபத்திய காலங்களில் அளவில் வறுமை நிலையினை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளன.
  • கம்போடியாவில், வறுமை நிலையின் தாக்கமானது 36.7 சதவீதத்திலிருந்து 16.6% ஆகக் குறைந்துள்ளது.
  • இது 5.6 மில்லியனாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கையை 7.5 ஆண்டுகளுக்குள் 2.8 மில்லியனாக பாதியாகக் குறைத்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்