19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த ஒரு இயற்கை ஆர்வலரான ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் என்பவர் ஆசியாவிலிருந்து ஆஸ்திரேலியா, நியூ கினியா மற்றும் அதன் அருகிலுள்ள இதர பிற தீவுகளுக்கு புலம் பெயர்ந்த போது, உயிரினங்களின் வாழ்வியலில் ஒரு வியத்தகு மாற்றத்தைக் கவனித்தார்.
அவர் பெருங்கடலில், பின்னர் வாலஸ் எல்லைக் கோடு என்றும் அழைக்கப்பட்ட ஒரு புலனாகா எல்லையினை உருவாக்கினார்.
இது பாலி மற்றும் லோம்போக் ஆகிய தீவுகளுக்கு வழியாக சென்று, அதன் வடக்கில் போர்னியோவிற்கும் தெற்கே சுலவேசிக்கும் இடையில் மிண்டானாவோவின் தெற்கே வளைந்து செல்கிறது.
அவரைப் பொறுத்தவரையில் இந்தக் கோடு ஆனது அதன் இருபுறமும் உள்ள பல்வேறு வகையான விலங்குகளுக்கு இடையே ஒரு வேலி போன்று உள்ளது.
வாலஸ் கோட்டின் மேற்கில் ஆசிய சுற்றுச்சூழல் அமைப்பின் மிகவும் சிறப்பியல்பு இனங்களான குரங்குகள், மனிதக் குரங்குகள், காண்டாமிருகங்கள், அணில்கள், புலிகள் மற்றும் இருவாச்சிகள் (ஹார்ன்பில்கள்) காணப்படுகின்றன.
வாலஸ் கோட்டின் கிழக்கே ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் அமைப்புடன் தொடர்புடைய மர வாழ் கங்காருக்கள், கொண்டைக் கிளி மற்றும் தேன் உண்ணி பறவைகள் உள்ளன.
வாலஸ் கோட்டிற்கும் வெபர் கோட்டிற்கும் இடையிலான ஒரு பகுதி வாலஸ்யா என்று அழைக்கப் படுகிறது.
தனியாக அமைந்த வாலஸ் தீவுகள் ஆனது, அருகிலுள்ள கண்டங்களை விட குறைந்த பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொண்டுள்ளன என்பதோடு மேலும், உடும்பு, மான்பன்றி/ பாபிருசா மற்றும் இராட்சதத் தேனீக்கள் போன்ற தனித்துவமான உயிரினங்களைக் கொண்டுள்ளன.