TNPSC Thervupettagam

பல்வேறு பிரிவினர்களின் மாணவர் சேர்க்கை

May 25 , 2024 55 days 146 0
  • 2014-15 முதல் 2021-22 ஆம் ஆண்டு வரை பல்வேறு பிரிவுகளின் கீழ் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் (NCBC) தெரிவித்துள்ளது.
  • தரவுகளின்படி, பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை 4.61 மில்லியனில் இருந்து 44 சதவீதம் உயர்ந்து 6.62 மில்லியனாக அதிகரித்து உள்ளது.
  • அதே காலக்கட்டத்தில் சிறுபான்மையினர் வகுப்பினைச் சேர்ந்த மாணவிகளின் சேர்க்கையானது 42.3 சதவிகிதம் என்ற குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்து, 1.07 மில்லியனிலிருந்து 1.52 மில்லியனாக அதிகரித்துள்ளது.
  • 2014-15 ஆம் ஆண்டில் 1.641 மில்லியனாக இருந்த பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பிரிவினைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையானது 2021-22 ஆம் ஆண்டில் 65.2 சதவீதம் உயர்ந்து 2.71 மில்லியனாக அதிகரித்துள்ளது.
  • பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர் பிரிவினைச் சேர்ந்த மாணவிகளின் சேர்க்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை 71 சதவீதம் அதிகரித்துள்ளது என்ற நிலையில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவிகளின் சேர்க்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
  • 2014-15 ஆம் ஆண்டில் 34.2 மில்லியனாக இருந்த உயர்கல்விச் சேர்க்கை 2020-21 ஆம் ஆண்டில் 41.4 மில்லியனாக உயர்ந்துள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் இது 43.3 மில்லியனை எட்டியது என்பதோடு இது 26.5 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • 2014-15 ஆம் ஆண்டில் 15.7 மில்லியனாக இருந்த மாணவிகளின் சேர்க்கையானது 2021-22 ஆம் ஆண்டில் 32 சதவீதம் அதிகரித்து 20.7 மில்லியனாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்