TNPSC Thervupettagam

பல் பரிமாண வறுமைக் குறியீடு 2022

October 22 , 2022 639 days 742 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பல் பரிமாண வறுமைக் குறியீட்டினை (MPI) ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்னெடுப்பு அமைப்பு (OPHI) ஆகியவற்றினால் வெளியிடப் பட்டது.

முக்கிய சிறப்பம்சங்கள்

  • உலகின் 1.2 பில்லியன் மக்கள் பல பரிமாணங்களின் அடிப்படையில் ஏழ்மை நிலையில் உள்ளனர்.
  • அவர்களில் கிட்டத்தட்டப் பாதியளவிற்கும் மேலானவர்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர்.
  • ஏழ்மை நிலையில் உள்ள பாதியளவிற்கும் மேலானவர்கள் (593 மில்லியன்) 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர்.
  • ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதி (579 மில்லியன்), தெற்காசியா (385 மில்லியன்) போன்றப் பகுதிகளில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
  • இரண்டு பிராந்தியங்களிலும் சேர்ந்து 83% ஏழை மக்கள் வசிக்கின்றனர்.
  • கடந்த 15 ஆண்டுகளில் 415 மில்லியன் மக்களை வறுமை நிலையில் இருந்து இந்தியா மீட்டெடுத்துள்ளது.
  • இந்தியாவில் இன்னும் 22.8 கோடி பேர் பல் பரிமாண ஏழ்மை நிலையில் உள்ள நிலையில், அவர்களில் 9.7 கோடி பேர் குழந்தைகள் ஆவர்.
  • இந்தியாவைத் தொடர்ந்து 9.6 கோடி என்ற அளவுடன் நைஜீரியா இடம் பெற்றுள்ளது.
  • இந்த இந்திய மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர், குறைந்தபட்சம் ஒருவராவது ஊட்டச் சத்துக் குறைபாடு கொண்டவர் உள்ள குடும்பத்தில் வாழ்கின்றனர்.
  • நாட்டில் 2005/06 ஆம் ஆண்டில் 55.1% ஆக இருந்த வறுமையின் நிலை 2019/21 ஆம் ஆண்டில் 16.4% ஆகக் குறைந்துள்ளது.
  • 2005-06 மற்றும் 2019-21 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 15 ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவில் 41.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
  • தற்போது தெற்காசியாவில் துணை சஹாரா ஆப்பிரிக்காவை விட குறைவான அளவில் ஏழைகளின் எண்ணிக்கை பதிவாகவில்லை.
  • 2005/2006 முதல் 2015/2016 வரையிலான காலக்கட்டத்தில் பதிவான 8.1% உடன் ஒப்பிடும் போது, ​​2015/2016 ஆம் ஆண்டு முதல் 2019/21 ஆம் ஆண்டு வரையிலான ஒப்பீட்டு அளவிலான குறைப்பு ஆண்டிற்கு 11.9% அளவிற்கு வேகமான ஒன்றாக பதிவானது.
  • 2015-16 ஆம் ஆண்டில் ஏழ்மையான மாநிலமாக இருந்த பீகார், பல் பரிமாண வறுமைக் குறியீட்டு மதிப்பில் முழுமையான அடிப்படையில் மிக வேகமான குறைவு ஏற்பட்டது.
  • 2015/2016 ஆம் ஆண்டில் பதிவான ஏழ்மையான மாநிலங்களாகப் பதிவான 10 மாநிலங்களுள், 2019-21 ஆம் ஆண்டில் ஒரே ஒரு மாநிலம் (மேற்கு வங்காளம்) இந்தப் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.
  • இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில், கோவா மாநிலத்தில் அதிக சரிவு பதிவாகியுள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஜம்மு மற்றும் காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
  • கிராமப்புறங்களில் 2015-2016 ஆம் ஆண்டில் 36.6% ஆக இருந்த வறுமை நிலை 2019-2021 ஆம் ஆண்டில் 21.2% ஆகவும், அதுவே நகர்ப்புறங்களில் 9.0 சதவீதத்திலிருந்து 5.5% ஆகவும் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்