TNPSC Thervupettagam

பல நாடுகள் கலந்து கொண்ட கோப்ரா கோல்டு இராணுவப் பயிற்சி

February 23 , 2019 2104 days 605 0
  • தாய்லாந்து நாட்டின் வட தாய் மாகாணத்தில் உள்ள பிட்சனுலுக் பகுதியில் பல நாடுகள் கலந்து கொள்ளும் வருடாந்திர இராணுவப் பயிற்சியான “கோப்ரா கோல்டு” என்ற பயிற்சியை தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடங்கின.
  • இந்தப் பயிற்சியானது இராணுவக் களப் பயிற்சி, மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பயிற்சி என்ற 3 பயிற்சிகளைக் கொண்டிருக்கும்.
  • இது ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பல நாடுகள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளில் ஒன்றாகும். இந்தப் பயிற்சியானது ஒவ்வொரு ஆண்டும் தாய்லாந்தில் நடத்தப்படுகின்றது.
  • இந்தப் பயிற்சியானது முதன்முறையாக 1982 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதன் தலைமையிடம் தாய்லாந்தில் உள்ள பேங்காக் ஆகும்.
  • இந்தப் பயிற்சியானது ஆயுதப் படைகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்திற்கு என்று உருவாக்கப்பட்ட தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முன்னெடுப்பாகும்.
  • இந்தப் பயிற்சியில் இந்தியா முதன்முறையாக 2016 ஆம் ஆண்டில் கலந்து கொண்டது. இந்தப் பயிற்சியில் சீனா முதன்முறையாக 2015 ஆம் ஆண்டு கலந்து கொண்டது. ஆனால் சீனா மனிதாபிமான உதவிப் பயிற்சியில் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்