TNPSC Thervupettagam

பள்ளிக் கல்வித் துறையின் சாதனைகள்

September 16 , 2024 13 days 100 0
  • மத்தியக் கல்வி அமைச்சகமானது, சமீபத்தில் தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை கட்டமைப்பு (NIRF) அறிக்கையினை வெளியிட்டது.
  • நாடு முழுவதும் உள்ள 926 கல்லூரிகளில் 165 கல்லூரிகள் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளன.
  • பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 614 அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதற்கான முயற்சிகள் ஆனது 2022 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 1,086 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப் பட்டன.
  • அரசுப் பள்ளிகளில் மொத்தம் 394 கோடி ரூபாய் செலவில் 8,200 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • 2021-22 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு முழுவதும் 28,700 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திறன் மிகு வசதிகள் கொண்ட வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன.
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்