மத்தியக் கல்வி அமைச்சகமானது, சமீபத்தில் தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை கட்டமைப்பு (NIRF) அறிக்கையினை வெளியிட்டது.
நாடு முழுவதும் உள்ள 926 கல்லூரிகளில் 165 கல்லூரிகள் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளன.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 614 அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதற்கான முயற்சிகள் ஆனது 2022 ஆம் ஆண்டு முதல் மொத்தம் 1,086 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப் பட்டன.
அரசுப் பள்ளிகளில் மொத்தம் 394 கோடி ரூபாய் செலவில் 8,200 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
2021-22 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு முழுவதும் 28,700 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திறன் மிகு வசதிகள் கொண்ட வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.