TNPSC Thervupettagam

பள்ளிக் குழந்தைகள் மீதான யுனிசெப் அறிக்கை

September 4 , 2020 1543 days 809 0
  • யுனிசெப் அமைப்பானது கோவிட் – 19 : பள்ளிகள் மூடப்பட்ட போது குழந்தைகள் கற்கும் திறனைத்  தொடர்ந்து மேற்கொள்பவர்களாக உள்ளனரா?” என்ற தலைப்பு கொண்ட ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, உலகில் உள்ள பள்ளிக் குழந்தைகளில் (463 மில்லியன் குழந்தைகள் உலக அளவில்) குறைந்தது மூன்றில் 1 பகுதியினர் கொரானா காலத்தில் தங்களது பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் தொலைதூரக் கல்வி கற்றலை அணுக முடியாதவர்களாக உள்ளனர்.
  • உலக அளவில் தொலைதூரக் கல்வி கற்றல் வாய்ப்புகளைப் பெறாத 4 மாணவர்களில் 3 மாணவர்கள் ஊரகப் பகுதிகள்/ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
  • ஏறத்தாழ அனைத்து நாடுகளும் டிஜிட்டல் மற்றும் ஒளிபரப்பு தொலைதூரக் கல்வி  கற்றல் கொள்கைகளைச் செயல்படுத்தியுள்ளன. ஆனால் அவற்றில் 60% மட்டுமே தொடக்கக் கல்விக்கு முந்தைய நிலையில் அவற்றைச் செயல்படுத்தியுள்ளன.
  • இந்த அறிக்கையானது பிராந்தியங்களுக்கிடையே உள்ள சமத்துவமின்மையை எடுத்துக் காட்டுகின்றது.
  • ஆப்பிரிக்காவின் துணை சகாராப் பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகள் மிகவும் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளனர். அதில் பாதியளவு மாணவர்கள் தொலைதூரக் கல்வி கற்றலை எட்ட முடியாத நிலையில் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்