யுனிசெப் அமைப்பானது “கோவிட் – 19 : பள்ளிகள் மூடப்பட்ட போது குழந்தைகள் கற்கும் திறனைத் தொடர்ந்து மேற்கொள்பவர்களாக உள்ளனரா?” என்ற தலைப்பு கொண்ட ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, உலகில் உள்ள பள்ளிக் குழந்தைகளில் (463 மில்லியன் குழந்தைகள் உலக அளவில்) குறைந்தது மூன்றில் 1 பகுதியினர் கொரானா காலத்தில் தங்களது பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் தொலைதூரக் கல்வி கற்றலை அணுக முடியாதவர்களாக உள்ளனர்.
உலக அளவில் தொலைதூரக் கல்வி கற்றல் வாய்ப்புகளைப் பெறாத 4 மாணவர்களில் 3 மாணவர்கள் ஊரகப் பகுதிகள்/ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
ஏறத்தாழ அனைத்து நாடுகளும் டிஜிட்டல் மற்றும் ஒளிபரப்பு தொலைதூரக் கல்வி கற்றல் கொள்கைகளைச் செயல்படுத்தியுள்ளன. ஆனால் அவற்றில் 60% மட்டுமே தொடக்கக் கல்விக்கு முந்தைய நிலையில் அவற்றைச் செயல்படுத்தியுள்ளன.
இந்த அறிக்கையானது பிராந்தியங்களுக்கிடையே உள்ள சமத்துவமின்மையை எடுத்துக் காட்டுகின்றது.
ஆப்பிரிக்காவின் துணை சகாராப் பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகள் மிகவும் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளனர். அதில் பாதியளவு மாணவர்கள் தொலைதூரக் கல்வி கற்றலை எட்ட முடியாத நிலையில் உள்ளனர்.